கல்லிடைக்குறிச்சி அயன்சிங்கம்பட்டியில் கைவெட்டி சுடலைமாடன் கோயில் கொடை விழா நாளை துவக்கம்

அம்பை, ஏப்.24: கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி ஆலடிதெரு, மடத்து தெரு, கோயில் தெரு ஆகிய 3 ஊருக்கு பாத்தியப்பட்ட கைவெட்டி சுடலைமாடன் கோயிலில் சித்திரை கொடை விழா 19ம்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. நாளை (25ம்தேதி) மதியம் 1 மணிக்கு விரதமிருந்த கோமரத்தாடிகள் தாமிரபரணியில் புனித நீராடி ஊர்வலமாக தீர்த்த குடம் எடுத்து ஊர் சுற்றி வருதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட 21 திரவியங்கள் அபிஷேகம், மாகாப்பு அலங்காரத்தை தொடர்ந்து சுவாமி பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

26ம்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு மதிய கொடை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிறப்பு வாண வேடிக்கை நடக்கிறது.  நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி காடு சுற்றி வேட்டைக்கு சென்று வருதலை தொடர்ந்து சாமகொடை, படைப்பு நிகழ்ச்சி நடைபெறும். 27ம்தேதி அதிகாலை 2 மணிக்கு படைப்பு பிரசாதம் வழங்கப்படும்.

ஏற்பாட்டினை ஆதிதிராவிட நலச்சங்கம் அயன்சிங்கம்பட்டி கிளை தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: