×

100 நாள் வேலைக்கு முழுமையான ஊதியம் கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை கிராம மக்கள் ஆவேசம்

கோவில்பட்டி, ஏப். 24: மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முழுமையான ஊதியம் வழங்கக்கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை வடக்கு இலுப்பையூரணி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    கோவில்பட்டி அருகே வடக்கு  இலுப்பையூரணி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் கிராம மக்களுக்கு முழுமையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அனைத்து  வங்கிகளிலும் ஊதியம் வழங்காமல் குறிப்பிட்ட ஒரே வங்கியில் மட்டுமே கணக்கு வைக்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். தினமும் பணி வழங்க  வேண்டும். அனைத்து வங்கிகளிலும் தங்களது வேலைக்கான ஊதியத்தை  செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பண மோசடியில் ஈடுபடும் நபர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு இலுப்பையூரணியில் அண்ணா தொழிற்சங்க வட்டாரச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் பட்டி ஒன்றிய அலுவலகத்தை  நேற்று முற்றுகையிட்டனர். அத்துடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை பிடிஓ ஹரியிடம் அளித்து சென்றனர்.

Tags : Kovilpatti Union ,
× RELATED வேளாண் அலுவலகத்தில் ஆய்வு பெண் அதிகாரியை தாக்கிய தற்காலிக ஊழியர்