×

கயத்தாறு அருகே சூறைக்காற்றுடன் மழை மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு கிராமமே இருளில் மூழ்கியது

கயத்தாறு, ஏப். 24: கயத்தாறு அருகே வடக்குமயிலோடை இந்திரா காலனியில் சூறைக் காற்றுடன் நேற்று பெய்த மழையால் வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஊரே இருளில் மூழ்கியது.கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு மயிலோடை இந்திரா காலனியில் உள்ள 90 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி வேலையை பிரதானமாக கொண்டிருக்கும் இங்குள்ள மக்கள் தினமும் காலை வேலைக்குச் சென்றால் மாலை தான் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கயத்தாறு மற்றும் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றுடனும், இடி, மின்னலுடனும் இரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. வீட்டின் முன்னும் பின்னும் இருந்த மரங்கள் வீட்டின்
கூரைமீது விழுந்ததால் வீட்டின் மேற்கூறைகள் முழுவதுமாக சேதமடைந்தது. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைபட்டது. ராஜேந்திரன், செல்லத்துரை, ராஜ், சுவாமி, சொர்ணம்மாள் என்பவர்களது வீடுகளின் மேற்கூரைகள் முழுவதுமாக பறந்தது. இதில் சொர்ணம்மாள் 90 கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார். முதியோர் உதவித்தொகையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் மூதாட்டி கூரை விழுந்த சோகம் கண்கலங்க வைத்தது. இதுபோல வடக்குமயிலோடை ஊருக்குள்ளும், காலனியிலும் 12 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தகவலறிந்த தாசில்தார் லிங்கராஜ் அறிவுறுத்தலின்பேரில் ஆர்ஐ காசிராஜன், விஏஓ பாலசுதாகர் உள்ளிட்டோர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கயத்தாறில் நேற்று 45 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : village ,ground ,Kayatthara ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...