×

வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம்

வைகுண்டம், ஏப். 24:  வைகுண்டம் கள்ளபிரான்கோயிலில் சித்திரை திருவிழா        கொடியேற்றம் இன்று (24ம் தேதி) நடக்கிறது.  நவத்திருப்பதிகளில் முதலாவதாகத் திகழும் வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (24ம் தேதி) துவங்குகிறது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6மணிக்குள் வேதபாராயணம் முழங்க கொடியேற்றம், பின்னர் தேர்கால் நடுதல் நடந்தது. 5மணிக்கு திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை 6மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் வீதியுலா நடக்கிறது. இதை முன்னிட்டு திருமுளைசாத்துதல், மிருத்ஸங்கிரகணம், இரவு தோளுகிளியானில் சேனைமுதல்வர் புறப்பாடு நடக்கிறது. இதே போல் திருவிழா நாட்களில் தினமும் காலை தங்க தோளுக்கினியானில் சுவாதி வீதியுலா, தங்க மசகிரியில் கண்ணாடி மண்டபத்தில் திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி நடக்கிறது. மாலை  சிம்ம வாகனம், அனுமார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி கள்ளர்பிரான் வீதியுலா நடக்கிறது. வரும் 29ம் தேதி 5ம்நாளையொட்டி சுவாமி கள்ளர்பிரான், காய்சினவேந்தபெருமாள், எம்இடர் கடிவான், பொலிந்துநின்ற பிரான் ஆதிநாதபெருமாள் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10 மணிக்கு கருடவாகனத்தில் குடவறை பெருவாயில் எதிர்சேவையும் நடக்கிறது.  மே 3ம் அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி கள்ளர்பிரான் தேரில் எழுந்தருளியதும் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Chitta ,Kullapiran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...