×

கிணற்று தண்ணீர் விற்பனையை நிறுத்தக்கோரி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி, ஏப். 24:  கிணற்று தண்ணீரை எடுத்து விற்பனை செய்வதை  தடுத்து நிறுத்தகோரி கிராம மக்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
   கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்தில் உள்ள கணேஷ்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நகரில் உள்ள கிணற்றில் இருந்து தனிநபர் ஒருவர் தண்ணீரை எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு சென்று விற்பனை செய்து வருவதாகவும், தினமும் 2 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுத்து செல்வதால் இப்பகுதியில் நிலத்தடி நீராதாரம் குறைந்த வருவதுடன், தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறி கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் செந்தில்முருகன் என்பவரது தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரியிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், கிணற்று தண்ணீர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : office ,Kori Union Union ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்