×

ராட்சத குடிநீர் குழாய் உடைப்பிலிருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் குட்டைபோல தேங்கி துர்நாற்றம் மணப்பாறை அருகே தொடரும் அவலம்

மணப்பாறை, ஏப்.24:   மணப்பாறைக்கு காவிரி குடிநீர் வழங்கும் ராட்சத குழாய் உடைப்பிலிருந்து வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஆங்காங்கே குட்டை போல தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
 மணப்பாறை மற்றும் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள காவிரி ஆற்றிலிருந்து ராட்சத  குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ராட்சத குழாய்களிலிருந்து உடைப்பு ஏற்பட்டு மணப்பாறை அருகே கொட்டப்பட்டி, களத்துப்பட்டி பிரிவு, மாகாளிபட்டி, கலிங்கப்பட்டி உள்பட பல இடங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி ஆங்காங்கே குளம் போல் தேங்கி கிடக்கிறது. இப்படி தேங்கும் நீரில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கை, கால் கழுவவும், துணி துவைக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும், தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால், பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மறுபடியும், குழாய்களில் தண்ணீர் செல்லும்போது, தேங்கிய நீரும் அந்த குழாய் வழியே செல்கிறது. இந்த சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வறட்சியான காலத்தில், குடிநீர் தேவையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் ராட்சத குழாய்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை அடைக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...