பல்கலைக்கழகம் கல்விக்கு மகுடம் சூட்டும் கலசலிங்கம் நிகர்நிலை

மதுரை, ஏப்.24:  கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் கல்விக்கு மகுடமாக விளங்குகிறது.   விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா கிருஷ்ணன் கோயில் அருகிலுள்ளது கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம். 1984ல் துவக்கப்பட்டு, தற்போது நிகர்நிலை பல்கலைக்கழமாக வளர்ந்துள்ளது. கிராம மக்களின் வாழ்வியலை உயர்த்தும் நோக்கில் துவங்கப்பட்ட இப்பல்கலைக் கழகம் சர்வதேச அளவிலான வளரும் தொழில்நுட்பத்திற்கும், தொழிற்சாலைகளின் தேவைக்கும் ஏற்ப புதிய படிப்புத்துறைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிக வேலைவாய்ப்புடன், மாணவர்கள் சாதனைக்கான திறனையும் வளர்த்து வருகின்றனர். கல்வியாண்டில் 101 கம்பெனிகளில் 1,135 வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். பலர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். 70 லட்சம் சதுர அடி பரப்பளவில், 400 ஏக்கரில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் புத்தக வங்கி கொண்ட பிரமாண்ட நூலகம், மாணவ, மாணவியருக்கு தனி லிப்ட் வசதியுடன் 6 விடுதி கட்டிடங்கள், ஆசிரியர்களுக்கும் 6 தங்கும் விடுதிகள், ஆடிட்ேடாரியம், ஒலிம்பிக் தரமிக்க விளையாட்டு திடல், 6 கேண்டீன்கள், 24 மணி நேர வைபை வசதியும் உள்ளது. மின்னியல், மின்னணு, பயோ டெக்னாலஜி, பயோ - மெடிக்கல், ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், ஆட்டோ மொபைல், மின்னணு மற்றும் தொடர்பியல், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுடன் முதுகலை மற்றும் முனைவர் பாடப் பிரிவுகளுடன் பி.வொகம் என்ற 3 வருட புதிய படிப்பும் சேர்த்து 64 பாடப் பிரிவுகள் உள்ளன. போரின்சிக் சயின்ஸ், டேட்டா சயின்ஸ் ஆகிய பிரிவுகள் இந்தாண்டு முதல் துவக்கப்பட உள்ளன. நாட்டில் முதன்முறையாக தேசிய உயர்தரக்குழு இயந்திரவியல் துறைக்கு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது. மதிப்பெண்ணிற்கு ஏற்ப கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது.  
 இத்தகவலை கலசலிங்கம் பல்கலைக்கழக துணைத் தலைவர் சசி ஆனந்த் தெரிவித்தார்.

Related Stories: