மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி ெபான்மலை ரயில்வே இடத்தில் விளம்பர பேனர்கள் அகற்றம்

ஏர்போர்ட், ஏப்.24:  மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி பொன்மலை ரயில்வே இடங்களில் உள்ள அனைத்து வகையான விளம்பர பேனர்கள் நேற்று அகற்றப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவர் ரயில்வே இடங்களில் உள்ள அனைத்து வகையான விளம்பர பேனர்களையும், தொழிற்சங்க பேனர்களையும் அகற்ற வேண்டுமென பொதுநல வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது.அதன் பிறகு ரயில்வே இடங்களில் உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் ஏப்.24ம் தேதிக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து  ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இதனைத்தொடர்ந்து நேற்று காலை பொன்மலையில் உள்ள அனைத்து விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே ஊழியர்களும் ஈடுபட்டனர். இதற்காக ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொன்மலையில் உள்ள அனைத்து வகையான விளம்பர பலகைகளும், தொழிற்சங்க பேனர்களும் முழுமையாக அகற்றப்பட்டது. விளம்பர பேனர்கள் கட்டப்பட்டிருந்த குழாய் கம்பிகளையும் முழுமையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி சமுக ஆர்வலர் தெரிவித்தனர்.

Related Stories: