மண்ணச்சநல்லூரில் அடிப்படை வசதியின்றி அரசு மருத்துவமனை

மண்ணச்சநல்லூர், ஏப்.24: மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை எதுமலை ரோட்டில் இயங்கி வருகிறது. ராசாம்பாளையம், சா.அய்யம்பாளையம், தத்தமங்கலம், ஈச்சம்பட்டி, கல்பாளையம் என சுற்று வட்டார பகுதியிலிருந்து நோயாளிகள் இந்த மருத்துவமனைக்குதான் வந்து செல்ல வேண்டும். இங்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 700 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனை மேல்தளத்தில் 20 படுக்கை அறை உள்ளது மற்றும் குழந்தைபேறு அறைகள் தனியாக உள்ளன. இதற்கு 2 கழிவறை, ஒரு குளியல் அறை உள்ளன. இதில் ஒரு கழிவறை மட்டுமே திறந்து இருக்கும். இதனால் புறநோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: