முசிறி அருகே திண்ணக்கோணத்தில் கோடை விடுமுறையையொட்டி சிறுவர், சிறுமியருக்கு வீர விளையாட்டு பயிற்சி

தா.பேட்டை ஏப். 24:  முசிறி அடுத்த திண்ணக்கோணத்தில் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு சிலம்பம், விவசாயம் குறித்த அடிப்படை கோடை கால இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி உள்ளது.

   முசிறி அடுத்த திண்ணக்கோணம் அய்யாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் யோகநாதன் தலைமை வகித்து பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். அதிகாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 5 வயது முதல் 10 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், கபடி, உணவு பழக்க வழக்கங்கள், பெரியோர்களிடம் மரியாதையாக பேசி பழகும் முறைகள், வீட்டு தோட்டம் அமைத்தல், மூலிகை வளர்ப்பு அதன் பயன்கள், மரங்கள் பராமரிப்பு உள்ளிட்ட நற்பண்புகளும், வீர விளையாட்டுகளும், 15 தினங்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியினை யோகநாதன், தரணி, பூவேந்தன் ஆகியோர் அளிக்கின்றனர்.

 இதுகுறித்து இயற்கை ஆர்வலர் யோகநாதன் கூறுகையில், வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு வீர விளையாட்டுகளையும், நற்பண்புகளையும், ஆரோக்கியமான உடல் நலத்தையும் பெறுவதற்காக இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories: