×

நீடாமங்கலம் ஒரத்தூரில் வாய்க்கால் தூர் வாராததால் 30 ஏக்கர் விளை நிலம் தரிசு

நீடாமங்கலம், ஏப். 24: நீடாமங்கலம் அருகில் உள்ள ஒரத்தூர் பாசன வாய்க்கால் தூர் வாராததால் 30 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி ஒரத்தூர் கிராமம். இங்கு சுமார் 80 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு பாமணியாற்றில் இருந்து பிரியும்  பாசன வாய்க்காலில் தண்ணீர்  வந்து விவசாயம் நடைபெறும்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாமணியாற்றில் மணல் திருட்டு நடந்ததால் ஆறு கீழும், பாசன வாய்க்கால் மேலும் சென்று விட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்று பாசனம் நடைபெறாமல்   ஒரு சில விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர்.சிலர் சாகுபடி செய்ய முடியாமல் 30 ஏக்கர் வரை தரிசாக கிடக்கிறது. அதுவும் சிறு விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாததால் மின்மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளிடம் சிலர் நிலங்களை விற்றும், அடகும் வைத்து விட்டனர்.சிலர் மின் மோட்டார் வைத்திருப்பவர்களிடம் காசுக்கு தண்ணீர் வாங்கி சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு தற்போது ஒரு சிலர் பருத்தி, நெல் சாகுபடி செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தடி நீரையே பயன்படுத்தி சாகுபடி செய்து வரும் விவசாயிகள் ஒரத்தூரில் பாமணியாற்றில் தடுப்பணை கட்டி பாசன வாய்க்காலையும், வடிகால் வாய்க்காலையும் தூர் வார வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!