×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை அறிவியல் படிப்பிற்கு ஆர்வம் காட்டும் மாணவர்கள்

புதுக்கோட்டை,ஏப்.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பிற்கு ஆர்வம் காட்டாமல் கலை, அறியவில் படிப்படிற்கு ஆர்வம் காட்டி வருவதால் அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் அதிக அளவில் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த 19ம் தேதி பிளஸ்2 தேர்ச்சி விபரத்தை வெளியிட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வில் 9 ஆயிரத்து 74 மாணவர்களும், 11 ஆயிரத்து 137 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 211 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள்  வெளியிடப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 777 மாணவர்களும், 10 ஆயிரத்து 414 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 191 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 90.01 சதவீதம் ஆகும். இந்நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மேல்படிப்பிற்காக கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் பணிககளில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெருவாரியான மாணவ, மாணவிகள் கலை அறிவியல் படிப்பையை தேர்வு செய்கின்றனர். ஒரு சிலர் பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியில் படிப்பை தேர்வு செய்யும் மாணவ, மாணவிகள் அண்ணா பல்லைகக்கழக கவுன்சிலிங்கிக்கிற்கு விண்ணப்பத்து வருகின்றனர். கலை அறிவியல் படிப்பிற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, கறம்பக்கடி, அறந்தாங்கி பகுதியில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிலர் திருச்சி நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிக்கு சென்று விரும்பிய பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்து வருகின்றனர். சில வசதி படைத்த மாணவர்கள் கோயம்புத்தூர், சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு சென்று விண்ணபித்து வருகின்றனர். சிலர் வீட்டில் இருந்துகொண்டே ஆன்ைலயனில் விரும்பிய படிப்பிற்கு விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது தேர்ச்சி பெற்ற பிளஸ்-2 மாணவர்கள் பெறியியல் படிப்பில் ஆர்வம் காட்வில்லை. பெருவாரியான பேர் கலை அறிவியல் படிப்பை மட்டுமே தேர்வு செய்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் வேலை கிடைப்பதில் ஏற்படும் சிக்கலே முதன்மையான காரணம் என்ற கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.வேலை வாய்ப்பில் வரவேற்பு இல்லை இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பில் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் அந்த படிப்பிற்ககு வருடத்திற்கு குறைந்தது ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கலை அறிவியல் படிப்ப படித்தால் வேலைவாயப்பு ஓரளவிற்கு கிடைக்கிறது. இந்த படிப்பிற்கு குறைந்த அளவே செலவாகிறது. தற்போது கஜா புயல் தாக்கி எங்கள் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த நேரத்தில் எங்கள் பெற்றோர்களால் அதிக தொகை செலவு செய்து படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறோம். இப்படி பல பிரச்னைகளால் நாங்கள் அரசு கல்லூரியில் கலை அறிவியல் படிப்பை தேர்வு செய்து வருகிறோம் என்றனர்.

Tags : district ,Pudukottai ,
× RELATED 1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு