×

திருமயம் அருகே எச்சரிக்கை பலகை ஏதுமின்றி பாலம் கட்டும் பணி மும்முரம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

திருமயம், ஏப்.24: திருமயம் அருகே முக்கிய சாலையில் எச்சரிக்கை பலகையின்றி பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள பழுதடைந்த பாலங்களை நெடுஞ்சாலை துறையினர் இடித்துவிட்டு புதிய பாலங்களை கட்டி வருகின்றனர்.
இதனால் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்படமால் இருக்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பாலம் கட்டும் பணி நடைபெறுவதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை பலகை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சார்பில் வைக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் புதிய பாலம் கட்டும்பணி நடைபெறும் சாலையில் வரும் புதிய வாகன ஓட்டிகள் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டுள்ள குழிக்குள் விழுத்து விபத்தில் சிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனிடையே கடந்த வருடம் ராயவரத்தை அடுத்த கோட்டையூர் பகுதியில் இது போல் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் இது போன்ற உயிரிழப்பை தடுக்க அரிமளம், திருமயம் பகுதியில் நடைபெறும் பாலம் கட்டும் பணிகளை முன்கூட்டியே வாகன ஓட்டிகள் அறியும் வகையில் பாலம் கட்டும் நடைபெறும் பகுதியில் எச்சாpக்கை பலகை வைக்க வேண்டும் என்பதே அப்பகுதி வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : board ,wreath ,
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...