×

இலுப்பூர் கடைவீதியில் வரத்துவாரிகள் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

இலுப்பூர், ஏப்.24: இலுப்பூர் கடைவீதியில் அமைக்கப்பட்ட வரத்துவாரி கழிவுநீர் வாய்கால்களில் வாகனங்கள் சிக்காமல் தவிர்க்க வாய்கால்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலுப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை ஒரு ஆண்டு முன் சாலை ஓரத்தில் இரு புறங்களிலும் சுமார் ரூ.1.3 கோடி மதிப்பில் கழிவுநீர் வெளியேர வரத்து வாரிகள் அமைக்கப்பட்டு அதன் மேல் சிமெண்ட சிலாப்புகளினால் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. சாலை உயரமாக அமைக்கபட்டதால் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேரும் வரத்து வாரி சாலையில் இருந்து ஒருசில இடங்களில் உயரம் குறைந்து தாழ்ந்து விட்டன. சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சாலை ஓரத்தில் வாகனத்தை இறக்கும்போது சிலாப்பு கல் உடைந்து வாகனங்கள் வாரியில் சிக்கி சேதம் அடைகிறது. இரட்டை பிள்ளையார் கோயிலில் இருந்து செட்டித்தெரு அம்மன் கோயில் வரை இதுநாள் வரை 5 இடங்களில் வாகனம் சிக்கி சேதமடைந்துள்ளது.
இந்த சாலை இலுப்பூரின் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் சிக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாற்று வழி இல்லாத காரணத்தால் வாகனத்தை வெளியே எடுத்து அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைகிறது. இதன் வழியே வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். ஆகவே இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள வரத்துவாரியை உயரமாக அமைக்க வேண்டும் அல்லது இரு புறங்களிலும் ஒலிறும் கட்டைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : vendors ,Ilupur Bazaar ,
× RELATED பழநி கிரிவல வீதியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி