×

என்.வீ.எஸ் இல்ல விழா தமிழக காங். தலைவர் பங்கேற்பு

முஷ்ணம், ஏப். 24: என்.வீ.எஸ் இல்ல விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முஷ்ணம் என்.வீ.எஸ் இல்ல விழாவில் மணமகன் மருத்துவர் ஜனார்த்தனன், மணமகள் மருத்துவர் லாவண்யா ஆகியோரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம் ஆகியோர் நேரில் வாழ்த்தினர். இதுபோன்று முஷ்ணம் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், காங்கிரஸ் மாநில குழு உறுப்பினர் சித்தார்த்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, நகரத்தலைவர் சுப்புரவி, நிர்வாகிகள் தமிழ்வாணன், சிவசங்கரன், வெங்கடகிரி, வைத்தியநாதசாமி, திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தவ.அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர், எஸ்பிஜி தாளாளர் பார்த்தசாரதி, பிபிஜெ கல்லூரி நிர்வாகி பிரகாஷ், சி.எஸ்.ஜெயின் கல்லூரி நிர்வாகி சி.எஸ்.மகாவீர்சந்த் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Tags : NVS Home Festival Tamilnadu Cong ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்