2 மாத சம்பள பாக்கியை தராததை கண்டித்து மேட்டூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஸ்டிரைக்

மேட்டூர், ஏப்.24: 2மாத சம்பள பாக்கியை கண்டித்து, மேட்டூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரமாகும் கழிவுகளை அகற்றும் பணியில் 8 ஆண்கள் மற்றும் 38 பெண் துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹200 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி, நேற்று காலை பணியை புறக்கணித்து, மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கம் மேட்டூர் கிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் 47பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, மேட்டூர் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர்.

Related Stories: