×

நாய்க்கடியால் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி

சேலம், ஏப்.24: சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். சேலம் கிச்சிபாளையம் பகுதியில் கடந்த வாரம் வெள்ளி கிழமை (19ம் தேதி) தெரு நாய் ஒன்று, 50க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதில் அந்த தெரு நாயை பிடிக்க முடியாமல் ெபாது மக்களும், மாநகராட்சி ஊழியர்களும் சிரமப்பட்டனர்.
இறுதியாக அந்த நாயை பொது மக்கள் அடித்து கொன்றனர். இதனையடுத்து நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மாநகர நலஅலுவலர் பார்த்திபன் கூறுகையில், ‘‘கிச்சிபாளையம் பகுதியில் நாய்கடித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நான்கு முறை தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசிக்கும் 2வது தடுப்பூசிக்கும் 3 நாட்கள் இடைவெளி தேவைப்படுகிறது. 3வது தடுப்பூசி இந்த வாரம் இறுதியிலும் மற்றும் 4வது தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகும் போடப்படும். இவை அனைத்தும் அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சென்று அளிக்கப்படும்.’’ என்றார்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு