×

பள்ளிபாளையத்தில் சூறைக்காற்றுடன் மழை 2,500 வாழை மரங்கள் முறிந்து விழுந்தது

பள்ளிபாளையம், ஏப்.24:  பள்ளிபாளையத்தில் சூறை காற்றுடன் மழை பெய்ததால் இரண்டரை ஏக்கர் வாழை தோப்பு நாசமானது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்களில் இரண்டு முறை பலத்தமழை பெய்தது. இந்நிலையில், நேற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததில், கரும்பு தோட்டங்களில் பயிரிடப்பட்ட கரும்புகள் சாய்ந்தது. இந்நிலையில், செங்குட்டைபாளையத்தை சேர்ந்த விவசாயி சின்னுசாமியின் இரண்டரை ஏக்கர் வாழை தோப்பு முற்றிலும் சேதமானது. நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், 2,500 வாழை மரங்கள் குலையோடு முறிந்து விழுந்தது. இதனால், ஐந்து லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி சின்னுசாமி தெரிவித்தார்.மழையால் முறிந்த விழுந்த வாழை மரங்களை பள்ளிபாளையம் வேளாண்மைத்துறை அதிகாரிகள், தோட்டக்கலை துறையினர் பார்வையிட்டனர். மேலும், மழையால் பள்ளிபாளையம் காகித ஆலை காலனி ரயில் பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், தரைப்பாலம் வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு, மேம்பாலத்தில் மாற்றி அனுப்பப்பட்டது.

Tags : Pallipalayam ,
× RELATED அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி