×

₹12 லட்சத்திற்கு எள் விற்பனை

திருச்செங்கோடு, ஏப்.24: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது.
சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம, வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்தனர். 120 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த சுமார் 30 வியாபாரிகள் வந்தனர். ரகசிய டெண்டர் முறையில் ₹12 லட்சத்திற்கு எள் விற்பனையானது. கருப்பு எள் ரகம் கிலோ ₹115.70லிருந்து ₹142.70 வரையும், வெள்ளை ரகம் ₹112 முதல் ₹119.70  வரையும், சிவப்பு ரக எள் ₹113.90 முதல் ₹123.60 வரை விற்பனையானது.

Tags : sale ,
× RELATED ₹3.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்