×

குறைந்த விலையில் கிடைக்கும் புத்தகங்களால் சேலத்தில் ஏழை, எளிய மாணவர்களின் தேடல் மையம்

சேலம், ஏப்.24:  சேலத்தில் திறந்த வெளியில், குறைந்த விலையில் புத்தகங்களை விற்கும் சாலையோர கடைகள், ஏழை எளிய மாணவர்களின் தேடல் மையமாக திகழ்கிறது. உலக புத்தக தினத்தில் இந்த கடைகளில் திரண்ட கூட்டத்தால் உற்சாகம் நிலவியது.  நட்பை போல் இந்த உலகில் முக்கியமானது எதுவுமில்லை என்கின்றனர் இன்றைய இளம்வட்டங்கள்.  அதே நேரத்தில் ஒரு நல்ல புத்தகம், ஆயிரம் நண்பர்களுக்கு சமம் என்கின்றனர் அறிஞர்கள். இப்படி தனித்துவம் பெற்ற புத்தகங்களின் மாண்புகளை போற்றவும், வாசிப்பு திறனை மேம்படுத்தவும் ஆண்டு தோறும் உலக புத்தக தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக புத்தக தினவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் மாணவ, மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் திரண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றது கவனத்தை ஈர்த்தது.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள சாலையோர புத்தக கடைகளில் எல்கேஜி முதல் உயர் படிப்புகள் வரையிலான அனைத்து புத்தகங்களும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதேபோல் புராணம், இதிகாசம், வரலாறு, வர்த்தகம், அறிவியல், பொதுநூல்களும் விற்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற கடைகளில் நினைத்து பார்க்க முடியாத விலைக்கு விற்கும் புத்தகங்கள் கூட, நம்மால் இயன்ற விலைக்கு இங்கு வாங்க முடியும் என்பது சிறப்பு. இதனால் இந்த புத்தக கடைகள் ேசலம் மட்டுமன்றி, நாமக்கல், ேகாவை, ஈரோடு, தர்மபுரி என்ற இதர மாவட்ட மாணவர்களும் நாடி வரும் தேடல் மையமாக திகழ்கிறது. திறந்த வெளியில், குறைந்த விலையில் அறிவுப் ெபாக்கிஷங்கள், மாணவர்களின் கைகளில் ஆண்டாண்டு காலமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.  

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘சேலம் ேகாட்டை பகுதியில் 30க்கும் ேமற்பட்டவர்கள் 3தலைமுறையாக பழைய புத்தக கடைகளை நடத்தி வருகிறோம். பெரிய நூலகங்களில் இல்லாத அரிய புத்தகங்கள் கூட, எங்கள் கடைகளில் இருக்கிறது. மாணவர்களும், புத்தக ஆர்வலர்களும் எங்கள் கடைக்கு வந்து நீண்ட நேரம் ேதடிக்கூட, சில புத்தகங்களை எடுத்துச் செல்கின்றனர். இப்படி வரும் எந்த வாடிக்கையாளரிடமும் நாங்கள், கறாராக ஒரு விலையை நிர்ணயித்து கேட்பதில்லை. அவர்களுக்கும், எங்களுக்கும் கட்டுப்படியாகும் விலையில் கொடுக்கிறோம். தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது உண்மை தான். ஆனால் எங்களிடம் தலைமுறைகள் கடந்து வரும் குடும்பங்களை கருத்தில் ெகாண்டு, இந்த கடைகளை நடத்தி வருகிறோம். பழைய புத்தக கடைகள் என்ற அடைமொழியோடு எங்கள் கடைகளை அழைத்தாலும், புதிய விடியலுக்கு வழிகாட்டும் கடைகள் இது என்பதை ெபருமையோடு கூறுவோம்,’’ என்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு தேவை
புத்தக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘புத்தகங்கள் தனிமனித வாழ்க்கையே மாற்றக்கூடிய சக்தி கொண்டவை. எனவே தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுக்கு முன்பு போல், இப்போது புத்தக வாசிப்பில் ஆர்வம் இல்ைல என்பது உண்மை. டிவி, இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் வந்துவிட்டதால் புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் புத்தகம் வாசிப்பின் அவசியத்தை அரசே உணர்த்த வேண்டும். உலக புத்தக தினவிழாவை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடவேண்டும்” என்றனர்.

Tags : center ,Salem ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்