×

கடைகளில் தாராளமாக கிடைக்கும் குட்கா, பான்பாரக்

சேலம், ஏப். 24:   தமிழகத்தில் புகையிலை பழக்கமுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குட்கா, பான்பாரக் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அவை தட்டுப்பாடு இன்றி கடைகளில் கிடைக்கிறது. மகாராஷ்டிரா, பெங்களூரில் இருந்து பண்டல் பண்டலாக லாரிகள், மினி சரக்கு வாகனங்களில் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. ரயில்கள் மூலமமும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மர்மநபர்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதியில் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்களை விற்க கூடாது என்ற சட்டமே இருக்கிறது. ஆனால் அந்த பகுதியில் தான் அதிகமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறையினர், பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடை, மளிகைக்கடைகளில் அவ்வப்போது மட்டும் சோதனை நடத்தி, போதை பொருள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் போதுமான நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் குட்கா, பான்பாரக் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.  சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளில் பான்பாரக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தாரளமாக கிடக்கிறது.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டும் காணாலும் இருக்கின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு