×

வாக்கு எண்ணும் மையத்தில் திமுக சார்பில் ஏஜெண்டுகள் நியமனம்

தர்மபுரி, ஏப்.24: தர்மபுரி வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சார்பில் 24 மணி நேரமும் ஏஜெண்டுகள் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. வாக்கு பதிவு இயந்திரங்கள் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மதுரையில் வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் போலீசாரின் பாதுகாப்பை மீறி பெண் தாசில்தார் உள்ளே நுழைந்தார். இதையடுத்து அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் அரசியல்  கட்சிகளை சேர்ந்த பூத் ஏஜெண்ட்கள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சிகள் பூத் ஏஜென்டுகள் 24 மணிநேரமும் இருக்க தேர்வு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் நாடாளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரம் இருக்கும் இடத்திற்கு 3 பூத் ஏஜென்டுகளும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரம் இருக்கும் இடத்திற்கு தலா மூன்று பெரும் என 9 பேர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வாக்கு இயந்திரம் இருக்கும் இடத்தில் இருப்பார்கள். இதேபோல் பிறகட்சிகளும் நியமித்து வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கூறுகையில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக சார்பில் ஏஜெண்டுகள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் 22ம் தேதி வரை இருப்பார்கள் என்றார்.

Tags : Agents ,DMK ,vote count center ,
× RELATED திருவள்ளூர் சட்டமன்ற...