தர்மபுரி, ஏப்.24: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பரம்வீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 205 மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 23 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளியின் தலைவர் செல்வி தரன், தாளாளர் கணேஷ் தரன், செயலர் மீனாட்சி கணேஷ், இயங்குநர் திருநாவுக்கரசு, முதல்வர் வாசு மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி வாழ்த்தினர்.