×

மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

தர்மபுரி, ஏப்.24: தர்மபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களில் வளர்ந்திருக்கும் முள்மரங்களை அகற்றி  தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும் ஊராட்கிள் கட்டுப்பாட்டில் 856 ஏரிகள் உள்பட 930 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரி, குளங்களில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் உள்ளன. முள் மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி பெய்த கனமழைக்கு ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்து நீர் வெளியேறியது.  ஏரி, குளங்களில் தேங்கிய நீரை, கருவேல மரங்கள் அதிகளவில் உறிஞ்சின. இதனால் இரண்டே மாதங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் வறண்டு விட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை கடந்த 6ம் தேதி துவங்கி உள்ள நிலையில், ஏரி, குளங்களுக்கு வரும் தண்ணீரை பாதுகாக்க, மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் உள்ள கருவேல மரங்களை, உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறும் போது, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் மாதேமங்கலம் சோழவராயன் ஏரி, கோடியூர், ஜெட்டிஅள்ளி, சேஷம்பட்டி என 20க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள முள் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் 2 மாதத்தில் தண்ணீர் வற்றிவிட்டன. இதனால் கிணறுகளிலும் நீர்மட்டம் மளமளவென குறைந்துவிட்டன. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட நெல் பயிரை காப்பாற்றுவதற்கு தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. எனவே 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்றாமல் பொக்லைன் மூலம் மரங்களை அகற்றி ஏரிகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

Tags : Removal ,Zema ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்