×

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பல்லடம் கிளையில் நாளை வீட்டுவசதி கடன் முகாம்

பல்லடம், ஏப்.24:ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பல்லடம் கிளையில் வீட்டுவசதி கடன் முகாம் நாளை நடக்கிறது.  பல்லடம், நியூ எக்ஸ்டென்சன் வீதி, முதல் தளத்தில் உள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டுவசதி கடன் முகாம் நாளை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் வீட்டுமனை வாங்க, வீடு கட்ட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்க, வீடு பழுது பார்க்க, விஸ்தரிக்க, நிலுவையில் உள்ள அதிக வட்டி வீட்டு வசதி கடனை மாற்றி கூடுதல் தொகையை பெற கடன் வசதி அளிக்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் 9.25 சதவீதம் முதலும், சிறப்பு சலுகையாக செயலாக்க கட்டணத்தில் 0.25 சதவீதமும் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. இந்த கடன் முகாமில் கலந்து கொள்ள வருமான சான்றிதழ், மற்றும் கடன் வாங்க இருக்கும் சொத்து விபரங்களுடன் நேரில் வரவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tomorrow Housing Loan Credit Camp ,Rekco Home Accounting Pallamadu Branch ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா