திருப்பூர் அருகே பாறைக்குழிக்கு கம்பிவேலி அமைக்க கோரிக்கைதிருப்பூர் அருகே பாறைக்குழிக்கு கம்பிவேலி அமைக்க கோரிக்கை

திருப்பூர், ஏப். 24:  திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறை குழியைச்சுற்றி தடுப்பு வேலி அமைக்காமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சுமார் 60 அடி ஆழமுள்ள பாறைக்குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் அந்த பாறைக்குழி அருகில் உள்ள பகுதியில் மாநகராட்சி பள்ளி மற்றும் ரேஷன் கடை ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள், குடிபோதையிலும் சிலர் இந்த பாறைக்குழியில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த பாறைக்குழியின் ஓரத்தில் பிரதான சாலை செல்வதால், இரவு நேரங்களில் அந்த பாறைக்குழி வழியாக செல்ல வாகன ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர்.

அப்பகுதி மக்கள் பாறைக்குழியை சுற்றி கம்பிவேலி அமைக்ககோரி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆபத்தான பாறைக்குழியை சுற்றி கம்பிவேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: