காங்கயத்தில் காற்றுடன் மழை

காங்கயம், ஏப். 24: காங்கயம் அருகே நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சாலையோரம் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கயம் மற்றும் சுற்று பகுதியான, நத்தக்காடையூர், மருதுறை, பழையகோட்டை, சிவன்மலை, படியூர், ஊதியூர், காடையூர், உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக காங்கயம் நகரப்பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கொடுத்து ஓடியது. காங்கயம் பஸ் நிலையம் முன்பு உள்ள காமராஜர் வீதி பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. காற்றின் காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் கிழிந்து காற்றில் பறந்தது. காங்கயம் - ஈரோடு சாலையில் முள்ளிப்புரம் அருகே சாலையோரத்தில் இருந்த மே பிளவர் மரம் நேற்று வீசிய பலத்த காற்றிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் நேற்று காலை மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின் போக்குவரத்து சீரானது.

Related Stories: