ஓட்டல் சப்ளையர் கொலை வழக்கு குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

திருப்பூர், ஏப். 24:  திருப்பூர், செரங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (50). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருப்பூர், செட்டிபாளையத்தை அடுத்த, சென்னியப்பன் கவுண்டர் வீதியில் வசித்து வரும் சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் நாகராஜ் சப்ளையராக பணியாற்றி வந்துள்ளார். இந்த ஓட்டலில் வேலை குறைவாக இருக்கும் சமயத்தில் பெயிண்டராகவும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் ஓட்டல் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படிருந்தது. கடந்த 21ம் தேதி நாகராஜ் ஓட்டலில் மது அருந்தியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஓட்டலில் புகுந்து நாகராஜை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் நாகராஜ் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஊரக போலீசார் பிரேதத்தை கைபற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஓட்டலில் நாகராஜூடன் தங்கியிருந்த தமிழ் அண்ணா (35) என்பவர் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருப்பதால், இவர் நாகராஜை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் குற்றவாளியை பிடிக்க ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். நேற்று மாலை சந்தேகத்தின்பேரில் ஓட்டல் உரிமையாளர் சரவணகுமாரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் குமார் நகரில் உள்ள ஒரு மீன் கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முபாரக், வலையங்காடு, திருப்பூர்.

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதிக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால், சில சமயங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அமுதா, சாமுண்டிபுரம், திருப்பூர்.

திருப்பூர் காந்தி நகர் 60 அடி ரோட்டில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

- நடராஜ், காந்திநகர், திருப்பூர்.

திருப்பூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் குப்பைகளை காலதாமதமாக அகற்றுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. - சந்திரன், டீச்சர்ஸ் காலனி, திருப்பூர்.

திருப்பூர் குமரன் ரோட்டில் வாகனங்களை இருபுறமும் தாறுமாறாக நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செந்தில், வாலிபாளையம், திருப்பூர்.

நத்தகாடையூர் ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் உடைந்துள்ள நிலையில், அங்கு கற்கள், மண் ஆகியவற்றை ரோட்டின் அருகில் கொட்டியுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. - தாமு, திருப்பூர்.

Related Stories: