×

சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்

சூலூர், ஏப். 24:  சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்தது. தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள்  அமைச்சருமான ஏ.வ.வேலு தலைமை தாங்கினார். இதில், ‘’சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெற்றிக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், வெற்றிக்கனியை தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், எ.வ.வேலு பேசியதாவது:

வெற்றி ஒன்றே நம் இலக்காக இருக்க வேண்டும். வீடு தோறும் சென்று, கடந்தகால திமுக ஆட்சியின் சாதனைகளையும், தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியின் வேதனைகளையும் எடுத்துக்கூற வேண்டும். சூலூர் தொகுதி, 41 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 41 பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள்,சிறப்பாக பணியாற்ற வேண்டும்.இளைஞர் அணி, மகளிர் அணி,தொழிலாளர்அணி, மாணவர் அணி, பொறியாளர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி என ஒவ்வொரு அணியினரும் தனித்தனியாக  சுழன்று, வாக்கு சேகரிக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் இனி நமக்கு தோல்வி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு எ.வ.வேலு ேபசினார்.

வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி  பேசியதாவது:

அதிமுக ஆட்சியில், கொங்குநாட்டு அமைச்சர்கள், ஊழல் செய்து, கோடிகளை குவிக்கிறார்கள். அவர்களை ஒரு கை பார்க்க வேண்டும். மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். செய்த தவறுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் அனைத்து  தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஊராட்சி சபை கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய-மாநில அரசுகள் மீது மக்கள் கொண்டுள்ள கொதிப்பை இக்கூட்டத்தில் காண முடிந்தது.

ஒன்றுபட்டு உழைப்போம். உழைப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டால் வெற்றி வசப்படும். வெற்றிக்கனியை தலைவர் தளபதியிடம் ஒப்படைப்போம். இவ்வாறு வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி பேசினார். இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக்  எம்எல்ஏ, கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு  மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன்,  வழக்கறிஞர் பரந்தாமன் மற்றும் நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

Tags : Sulur Assembly ,constituency ,candidate ,DMK ,Pongalur Palanisamy ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...