×

தொடரும் பிளாஸ்டிக் ரெய்டு

ேகாவை, ஏப்.24:  கோவை நகரில் நேற்று 2வது நாளாக பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக சோதனை நடந்தது. தாமஸ் வீதி, பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, வடவள்ளி காமாட்சி அம்மன் கோயில் வீதி, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி நகர் நல பிரிவினர் நேற்று சோதனை நடத்தினர். பிளாஸ்டிக் கேரி பேக், கவர் போன்றவற்றை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 200 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்ச ரூபாய்க்கு அபராதம் விதித்த அதிகாரிகள், பிளாஸ்டிக் கேரி பேக் கவர்களை பறிமுதல் செய்தனர். ஓட்டல், தள்ளுவண்டி கடை, பழக்கடை, பூக்கடை, இறைச்சி கடை உட்பட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி