ரூ.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி. ஏப். 24: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், 86 விவசாயிகள் மொத்தம் 835 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட முதுநிலை செயலாளர் கவுசல்யாமோகன், விற்பனை கூட கண்காணிப்பாளர்(பொறுப்பு) மணிவாசகம் ஆகியோர்  முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், முதல் தரம் 431 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.91 முதல் அதிகபட்சமாக ரூ.97 வரையிலும்.  இரண்டாம் தரம் 403 மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.54.55 முதல் ரூ.86.35 வரையிலும் என விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் 41 டன் கொப்பரை ரூ.30 லட்சத்துக்கு ஏலம்போனது.  இதை 11 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: