தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

திருப்பூர், ஏப். 24:  திருப்பூர், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுப்ரமணி (42). இவர், பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருடைய அண்ணன் ஈஸ்வரமூர்த்தி (44). இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். ஈஸ்வரமூர்த்தி மது குடிப்பதற்காக தனது தம்பியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
Advertising
Advertising

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்ரமணி தனது வீட்டுக்கு அருகே நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த ஈஸ்வரமூர்த்தி, தனக்கு மது வாங்க பணம் கொடுக்காமல் நண்பருடன் சேர்ந்து மது அருந்திய சுப்ரமணியை பார்த்து கோபமடைந்த ஈஸ்வரமூர்த்தி, வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சுப்ரமணியின் இடுப்பில் குத்தியதாக தெரிகிறது. இதில், அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சுப்ரமணியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.

Related Stories: