பைக் மீது கார் மோதி இருவர் பலி

சென்னிமலை, ஏப்.24:  சென்னிமலை அருகே பைக் மீது கார்  மோதியதில் இருவர் பலியாகினர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் புலவனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (65) விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்தில் விளைந்த வாழைத்தாரை விற்பதற்காக அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரை அழைத்துக்கொண்டு பைக்கில் ஈங்கூர் வந்தார். ஈங்கூரில் உள்ள ஒரு கடையில் வாழைத்தாரை விற்றுவிட்டு இருவரும் ஊர் திரும்பும் போது ரயில்வே மேம்பாலம் அருகே பழனியில் இருந்து வந்த கார், பைக் மீது வேகமாக மோதியது. இதில், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். தலையில் காயத்துடன் பழனிச்சாமி பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: