ஆழியார் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

பொள்ளாச்சி, ஏப். 24:  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே பீடர் கால்வாய் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் நேற்று, சுமார் 10அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைபார்த்த தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்துக்கு வந்த, வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வேட்டைத்ததடுப்பு குழுவினர், தோட்டத்து புதர்கிடையே மறைந்திருந்த மலைபாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த பாம்பு, மக்காசோள காட்டிற்குள் சென்றது.  சுமார் இரண்டு மணிநேரம் போராடி அந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில்  விட்டனர்.
Advertising
Advertising

உடுமலை, ஏப். 24:  உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, கம்பம் நடுதல். 19ம் தேதி கொடியேற்றம், இன்று (24ம் தேதி) திருக்கல்யாணம், 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

இதையொட்டி, கோயிலில் தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதையொட்டி, உடுமலைக்கு அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருவிழாவையொட்டி, குட்டை திடலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏ.எம். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜாய்வீல், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், டிராகன் ராட்டினங்கள் மற்றும் மாருதி கார் சர்க்கஸ் ஆகிய சாகச விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.குழந்தைகள் விளையாட படகு சவாரி, ஜம்பிங் போன்ற விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி குட்டைத்திடலில் குழந்தைகளும், பொதுமக்களும் வந்து விளையாடி மகிழ்கின்றனர். இதனால் குட்டைத்திடல் களைகட்டி உள்ளது.

Related Stories: