×

மஞ்சூரில் இலவச ஜீரண மண்டல

மஞ்சூர், ஏப்.24:குந்தா ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூட்டம் மஞ்சூரில் நடந்தது. சங்க தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கண்ணப்பன், நிர்வாகிகள் அசோக்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். செயலாளர் விவேக்ஆனந்த் வரவேற்றார். முன்னதாக சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குந்தா ரோட்டரி சங்கத்தின் சார்பில் கோவை பிஎஸ்ஜி., மருத்துவமனையுடன் இணைந்து அடுத்த மாதம் 4,5 ஆகிய தேதிகளில் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச ஜீரண மண்டல தனிச்சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Tags : Free Zone ,Manchur ,
× RELATED மஞ்சூரில் ரேஷன் கடை ஊழியர் வீட்டில்...