×

மருத்துவ முகாம் நடத்த திட்டம் பிங்கர்போஸ்ட் - கால்ப்லிங்ஸ் சாலை விரிவாக்க பணி தீவிரம்

ஊட்டி, ஏப். 24: பிங்கர்போஸ்ட் - எச்பிஎப்., மாற்று சாலையான கால்ப்லிங்ஸ் சாலையோரங்களில் விரிவாக்க பணி மேற்கொள்வதால் மலர் கண்காட்சியின் போது சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை இருக்காது. ஆண்டு தோறும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, மே மாதம் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் நாள் தோறும் ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிடுவது வழக்கம். அதேபோல், ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி போன்ற நாட்களில் நகருக்குள் ஏராளமான வாகனங்கள் வரும். இதனை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில் பிங்கர்ஸ் போஸ்ட் முதல் எச்பிஎப்., வரையில் உள்ள கால்ப் லிங்ஸ் சாலையில் இரு புறங்களில் சுற்றுலா பயணிகள் வரும் பஸ்கள், வேன்கள் ஆகியவைகளை பார்க்கிங் செய்ய போலீசார் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், சாலையோரங்களில் ேசறும், சகதியும் அதிகம் உள்ள நிலையில், வாகனங்களை ஒதுக்கி நிறுத்த முடியாமல் ஓட்டுநர்கள் சாலையை ஆக்கிரமித்தே நிற்க வேண்டியிருந்தது. இதனால், இவ்வழித்தடத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தற்போது இச்சாலையோரங்களில் கான்கிரீட் கலவை போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலையும் விரிவடைந்துள்ளது. இதனால், இம்முறை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இச்சாலையோரங்களில் நிறுத்தினாலும் எவ்வித போக்குவரத்து நெரிசலும் ஏற்பட போவதில்லை. மேலும், இவ்வழியாகவும் வாகனங்கள் வந்துச் செல்ல முடியும்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி