×

பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி, ஏப். 24: ஊட்டி அருகேயுள்ள பைக்காரா நீர் வீழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் செல்லாத நிலையில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஊட்டி அருகே பைக்காரா அணை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணையில் இருந்து மின் உற்பத்திகாக தண்ணீர் திறந்து விடும் போது, அணையில் இருந்து பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இப்பகுதிக்கு சென்று நீர் விழ்ச்சியை கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

அணையின் முன் பகுதியில் உள்ள நுண்புனல் மின் நிலையத்தில் நாள் தோறும் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இதனால், இந்த நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர் விழ்ச்சியை கண்டு ரசித்து செல்வது வழக்கம். தற்போது ேகாடை சீசன் துவங்கியுள்ள நிலையில், நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் செல்லாத நிலையில், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் நலன் கருதி நாள் தோறும் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி