×

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்கு 300 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு, ஏப். 24: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகத்தில், சுழற்சி முறையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,`ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மூன்று அலுவலர்கள் என மூன்று ஷிப்ட்டாக ஆறு தொகுதிக்கும் 54 பேர் பணியில் உள்ளனர். இந்த அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்க 84 சிசிடிவி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 98 பேர் என சுழற்சி முறையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தினேஷ், கோட்டாட்சியர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : policemen ,
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு