×

வேளாண் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 2 மாதம் இலவச பயிற்சி தொடக்கம்

ஈரோடு, ஏப். 24: ஈரோடு திண்டல் வித்யாநகரில் செயல்பட்டு வரும் வேளாண்மை பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை சங்கம் (அக்காஸ்) சார்பில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த பட்டதாரிகள், வேளாண் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு 2 மாதம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு தனித்தனியாக தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். 2 மாத பயிற்சி முடித்தவுடன் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் மேனேஜ் நிறுவனத்தின் மூலமாக சான்று வழங்கப்படும்.  பயிற்சி முடித்தவர்கள் வேளாண் பயிர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்வேறு வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி சொந்தமாக வருமானம் ஈட்டலாம். இதற்கு வங்கிகள் மூலம் கடனுதவியும், மானியமும் வழங்கப்படும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வனவியல், பட்டுவளர்ச்சி, உணவியல், உயிரியல் பட்டத்தோடு வேளாண் பட்டயம் அல்லது முதுநிலை வேளாண் பட்டயப்படிப்பு, வேளாண் பட்டயப்படிப்பு அல்லது வேளாண் முதுநிலை பட்டயப்படிப்பு ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  

தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள பட்டதாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘தலைவர், வேளாண்மை பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை சங்கம், வித்யாநகர், திண்டல்மேடு, ஈரோடு-12’ என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேராகவோ சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை  www.agcass.irg என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த பயிற்சி மூலம் வேளாண் பயிர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் சுயமாக வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி பயன் பெற வேளாண் பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : graduate graduates ,
× RELATED வேளாண் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 2 மாதம் இலவச பயிற்சி தொடக்கம்