×

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

ஈரோடு, ஏப். 24:  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவது பெற்றோர்களை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  இணையதளம் மூலம் மே மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட  முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் விண்ணப்பம் எவ்வாறு பெறுவது, எந்தெந்த அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டும், விண்ணப்பத்தின் போது என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால், ஈரோடு மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் இது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவது பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Private Schools ,
× RELATED மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக...