போத்தனூர் தொழில் அதிபர் கொலை வழக்குதனிப்படையினர் சென்னை விரைவு

கோவை, ஏப்.24: கோவை புலியகுளம் மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் பரந்தாமன்(36). இவர் போத்தனூரில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அவருடைய ஒர்க் ஷாப்பில் வைத்து கடந்த 18ம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக கோவை சின்னியம்பாளையம் கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த ரவி(30), அவருடைய நண்பர்களான சென்னையை சேர்ந்த மருதுபாண்டி(30), திருப்பூரை சேர்ந்த நவீன்(25), கூலிப்படையை சேர்ந்த கும்பகோணம் கார்த்திக், சென்னையை சேர்ந்த லோகேஸ், பெரம்பலூர் டேவிட் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கடந்த 21ம் தேதி கைது செய்தனர்.

Advertising
Advertising

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் கார்த்திக் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர். இவர்களில் தலைவனாக செயல்பட்ட கார்த்திக் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார் திருட்டு வழக்கில் கைதாகியதால் அவர் போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் பல்வேறு திருட்டு, கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கும் உள்ளது. கார்த்திக்குக்கு சென்னையில் காதலி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்னையில் தங்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Related Stories: