கோவை அரசு கலைக்கல்லூரி ரிசல்ட் மே 17ல் வெளியிட முடிவு

கோவை, ஏப். 24: கோவை அரசு கலைக்கல்லூரியின் பருவ தேர்வு முடிவுகள் வரும் மே 17ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. இதில், இளங்கலையில் 5 ஆயிரம் பேர், முதுகலையில் 1,200 பேர் என சுமார் 6,200 பேர் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் கடந்த 12ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தேர்வுகள் வரும் மே 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டமாக நடக்கிறது. அதன்படி, மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 26,27 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதனை தொடர்ந்து, முதுகலை படிப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 3ம் தேதி நடக்கிறது. பின்னர், இளங்கலையில் முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் மே 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதனை தொடர்ந்து மே 17ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: