×

சாத்தூர் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை அதிகாரிகள் கவனிப்பார்களா?

சாத்தூர், ஏப். 24: சாத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என சுகாதாரமற்ற குடிநீரை விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து, தனியார் நிறுவனங்கள் சுத்திகரித்து, வாகனங்கள் மூலம் ஒரு குடம் குடிநீர் ரூ.12க்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு வாகனங்களில் குடிநீர் கொண்டு வரும் தொட்டிகள் சுகாதாரமற்ற முறையிலும், தூய்மையற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த தொட்டிகளில் கொண்டு வரும் நீரை குடிப்பதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களில் உள்ள தொட்டிகளை ஆய்வு செய்து, சுகாதாரமான குடிநீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sattur ,area care ,
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை