×

உத்தமபாளையம் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை

உத்தமபாளையம், ஏப்.24: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. உத்தமபாளையம் கோம்பை ரோட்டில் இயங்கும் எஸ்.ஏ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன், உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கல்விமாவட்ட அளவில் முதலிடம் பெற்றதுடன், வருவாய் மாவட்ட அளவிலும்  நான்காம் இடத்தை பெற்று சாதனை மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவி மஞ்சுளா 573 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், ஹேமதர்சினி 562 மதிப்பெண்களை பெற்று இரண்டாமிடத்தையும்,  ரிகாசினி 556 மதிப்பெண்களை பெற்று மூன்றாமிடத்தையும்,  சபானாபர்வீன் 550 மதிப்பெண்களுடன் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதேபோல் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேர், 500 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 34 பேர், 350 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேர் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை பள்ளியின் தாளாளர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Uthamapalayam Matriculation School ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு