×

மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

உத்தமபாளையம், ஏப்.24:  உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. உத்தமபாளையம் பி.டி.ஆர்.காலனியில் இயங்கி வரும் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண்ணாக 532 மதிப்பெண்களும், இரண்டாவது மதிப்பெண்ணாக 503 மதிப்பெண்களும், மூன்றாம் மதிப்பெண்ணாக 486 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்தனர். பள்ளியில் பயின்று சாதனை படைத்த மாணவ, மாணவியரை தாளாளர் காத்துன்ஜன்னத், செயலாளர் சைபுல்இஸ்லாம் மற்றும் முதல்வர் நூருல்ஷிபா உள்ளிட்டோர் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் ஜிந்தா மதார்மைதீன் செய்திருந்தார்.

Tags : Matriculation School ,
× RELATED காலநிலை மாற்றத்தின் காரணமாக...