×

குறைந்த மின்அழுத்தத்தால் மக்கள் அவதி

சிங்கம்புணரி, ஏப்.24: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் செட்டிகுறிச்சியில் வார்டு1 மற்றும் வார்டு 2ல் உள்ள பொதுமக்களுக்கு உலகூரணிப்பட்டி டிரான்ஸ்பார்மர் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த டிரான்ஸ்பார்மரில் கடந்த சில மாதங்களாக குறைந்தளவு மின்சாரம் வருகிறது. டிரான்ஸ்பார்மரிலிருந்து விவசாய மின் இணைப்புகள், அங்கன்வாடி, நியாயவிலைக்கடை, ஊராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் சிறு மின்விசை பம்புகள், பிராய்லர் கோழி பண்ணைகள், ஓட்டல்கள் என அதிக மின் தேவை காரணமாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் தண்ணீர் மோட்டார் மற்றும் மின் விளக்குகள் எரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மின்னணு பொருட்கள் அடிக்கடி பழுது அடைகிறது. மேலும் வெயில் காலம் என்பதால் மின் விசிறி வேகம் குறைந்தே காற்று கிடைப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து மின்வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...