×

அழகப்பா கல்வியியல் கல்லூரி தமிழக அளவில் சிறந்தது பதிவாளர் பெருமிதம்

காரைக்குடி, ஏப்.24: தமிழக அளவில் அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி சிறந்து விளங்குகிறது என பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் 69வது ஆண்டுவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாலு வரவேற்றார். பதிவாளர் குருமல்லேஷ்பிரபு தலைமை வகித்து பேசுகையில், வள்ளல் அழகப்ப செட்டியாரால் 1950ல் இக்கல்லூரி துவங்கப்பட்டது. இதுவரை இங்கு 7000க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர். தமிழகஅளவில் பி.எட் கல்லூரிகளில் அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியும், உடற்கல்வியியல், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியும் சிறந்து விளங்குகிறது.

மாணவர் சேர்க்கையில் பெண்களின் சேர்க்கை 73 சதவீதமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அவசியமான ஒன்று. எனவே மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்பிப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. ஒரு பெண் மகிழ்ச்சியாக இருந்தால் அப்பெண் சார்ந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். உடல் மற்றும் மனரீதியாகவும், வலிமைமிக்கவர்களாகவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும், சமூகத்தோடு ஒத்துப்போக் கூடியவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர்களின் தலையாய கடமை என்றார். சென்னை பச்சையப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் நாராயணன், கல்வியியல் துறை டீன் தர்மலிங்கம், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பியோஅல்பினா ஆண்டு அறிக்கை வாசித்தார். சண்முக ரேவதி நன்றி கூறினார்.

Tags : Azhagappa College of Education ,registrar ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...