×

இலங்கை குண்டுவெடிப்புக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

காரைக்குடி, ஏப்.24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாகுல் தெரிவித்துள்ளதாவது: இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் திருப்பலியின் போது தேவாலயம் உள்பட 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தீவிரவாதம் என்பது அதை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்யும் தீவிரவாத செயலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நிராயுதபாணியாக இருக்கும் மக்களின் மீது பண்டிகை தினத்தில் அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது.
இலங்கையில் ஓய்ந்து போன நிலையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குகிறதோ என நினைக்கும் வகையில் இச்சம்பவம் உள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகளின் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Tahaheed Jamaat ,Sri Lankan ,
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை