×

தேர்தலுக்காக பயணம் வடமாநில தொழிலாளர்களால் பணிகள் பாதிப்பு

ராமநாதபுரம், ஏப்.24: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூலி தொழிலாளர்களாக 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். மாவட்டத்தில் சாலைப்பணிகள், கட்டிடப் பணிகள், உப்பளம், இறால் பண்ணைகள், ஹோட்டல்கள், லாட்ஜ் போன்ற இடங்களில் கூலி தொழிலாளிகளாக அதிகமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கின்றனர். சம்பளத்தை வங்கிகளின் மூலமாக குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று திரும்புவர்கள். இங்கேயே தங்கி பணிகளை செய்வதால் தடையில்லாமல் வேலைகள் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஜனநாயக கடமையாற்ற அனைவரும் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றுவிட்டனர். வடமாநில தொழிலாளர்கள் இல்லாத நிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் முக்கியமான பணிகளை செய்ய முடியாமல் உள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம், ஏர்வாடி போன்ற சுற்றுலா தலங்களில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்களில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத நிலையில் பல பணிகள் பாதிப்படைந்துள்ளது.

Tags : Northwest ,
× RELATED டெல்லி குடியிருப்புப் பகுதியில்...