×

அதிகாரிகள் அறிவிப்பு நம்புதாளையில் கந்தூரி விழா

தொண்டி, ஏப்.24: நம்புதாளையில் நடந்த கந்தூரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளை மகான் வெள்ள நெய்னா முகம்மது ஒலியுல்லா தர்ஹா 89வது கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கடந்த 12ம் தேதி கொடி ஏற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் இரவு ஹத்தம் ஓதி நோடசை வழங்கப்பட்டது. இதுபோல் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கந்தூரி விழா நடைபெற்றது. கந்தூரி விழாவிற்காக தர்ஹா பல வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : ceremony ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா